நடைபெற உள்ள மாநில பெண்கள் ‘ஆக்கி’ போட்டிக்கு திருச்சி அணி வீராங்கனைகள் தேர்வு

பாளையங்கோட்டையில் நடைபெற உள்ள மாநில பெண்கள் ‘ஆக்கி’ போட்டியில் பங்கேற்க உள்ள திருச்சி மாவட்ட அணிக்கான வீராங்கனைகள் தேர்வு நடந்தது.

Update: 2017-03-22 22:00 GMT

திருச்சி,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வருகிற 30–ந்தேதி முதல் ஏப்ரல் 2–ந்தேதி மாநில அளவிலான பெண்கள் ஆக்கி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்க உள்ள திருச்சி மாவட்ட பெண்கள் ஆக்கி அணிக்கு வீராங்கனைகள் தேர்வு முகாம் நேற்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.

வீராங்கனைகள் தேர்வு

திருச்சி ஜமால் முகமது, ஹோலிகிராஸ் கல்லூரிகள், மணப்பாறை தியாகேசர் ஆலை பள்ளி அணி, மற்றும் பொன்மலைப்பட்டியை சேர்ந்த அணி வீராங்கனைகள் கலந்து கொண்டு ஆக்கி விளையாடினார்கள். இதில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் திருச்சி மாவட்ட பெண்கள் ஆக்கி அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்ட ஆக்கி சங்க தற்காலிக கமிட்டி தலைவர் விஜயராஜன் மற்றும் சுப்பிரமணியன், கிள்ளிவளவன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவினரும் அனிதா உள்ளிட்ட பயிற்சியாளர்களும் வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.


மேலும் செய்திகள்