ஆக்கி சங்கத் தேர்தலை நடத்த நீதிபதி நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஆக்கி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற இருந்தது. ஆனால், இந்த தேர்தலுக்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2017-12-27 21:30 GMT

சென்னை,

வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கி சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த விவாகரத்தில் சுமூக தீர்வு காணப்பட்டதால், தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்றும் இருதரப்பினரும் கோரிக்கை முன் வைத்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.வி.கார்த்திகேயன், தடையை நீக்கியது மட்டுமல்லாமல், சென்னை ஆக்கி சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கே.பெருமாளை தேர்தல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டார்.

‘நீதிபதி பெருமாள் தகுதியான உறுப்பினர்களின் பட்டியலை தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும். அதன்பின்னர் 3 வாரத்தில் தேர்தல் முடிவு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு வருகிற ஜனவரி 12–ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்