மாநில ஆக்கி போட்டி: மத்திய கலால் வரி அணிக்கு 2–வது வெற்றி

ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2018-02-17 20:30 GMT

சென்னை,

ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு கோப்பைக்கான மாநில ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 6–வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் மத்திய கலால் வரி அணி 3–1 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வே அணியை வீழ்த்தி 2–வது வெற்றியை ருசித்தது. தெற்கு ரெயில்வே அணி சந்தித்த 2–வது தோல்வி இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி) அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் ஆட்டத்தில் தோற்று இருந்தது. முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு இருந்த ஐ.சி.எப். அணி முதல் தோல்வியை சந்தித்தது. இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் தெற்கு ரெயில்வே–ஐ.ஓ.பி. (மாலை 4 மணி), ஐ.சி.எப்.–மத்திய கலால் வரி (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்