காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டி; இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டியை சமன் செய்தன
காமன்வெல்த் போட்டி ஆடவர் ஹாக்கி பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2-2 கணக்கில் போட்டியை சமன் செய்தன. #CWG2018
கோல்டு கோஸ்ட்,
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஹாக்கி பிரிவில், இந்தியாவின் தில்பிரீத் சிங் ஒரு கோலும், ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி மற்றொரு கோலும் போட்டு 2-0 என்ற கணக்கில் அணியை முன்னணியில் நிறுத்தினர்.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணியின் ஜூனியர் முகமது இர்பான் ஒரு கோலும், போட்டி முடிவதற்கு 7 விநாடிகளுக்கு முன் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி அலி முபாஷர் ஒரு கோலும் அடித்து 2-2 என போட்டியை சமன் செய்தனர்.