ஹாக்கி
ரஷ்யா: ஐஸ் ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டு, 5 கோல்கள் அடித்து அசத்திய அதிபர் புதின்

கண்காட்சி ஐஸ் ஹாக்கி போட்டியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 5 கோல்கள் அடித்தார். #VladimirPutin #IceHockey
மாஸ்கோ, 

ரஷ்யாவில்  நடைபெற்ற கண்காட்சி ஐஸ் ஹாக்கி போட்டியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கலந்து கொண்டார். இந்த போட்டியில் புதினின், லெஜண்ட்ஸ் ஆஃப் ஹாக்கி அணி 12-7 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்று நடந்த ஒரு கண்காட்சி ஐஸ் ஹாக்கி போட்டியில் லெஜண்ட்ஸ் ஆஃப் ஹாக்கி அணி 12 கோல்கள் அடித்தது. இதில் 5 கோல்கள் புடின் சார்பில் அடிக்கப்பட்டது. ரஷ்ய ஜனாதிபதியால் இந்த அணி நிர்வகிக்கப்படுவதால் இந்த அணியை யாரும் வெல்ல முடியாமல் இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

முன்னதாக, முன்னாள் என்.ஹெச்.எல் வீரர்களுடன் இணைந்து விளாடிமிர் புடின் விளையாடினார். புடின் கடந்த 2015-ம் ஆண்டு 8 கோல்கள் அடிந்திருந்தார். கடந்த வருடம் நடந்த போட்டியில் 7 கோல்கள் அடித்தார். இப்போது வயதாகி விட்டதால் தொழில் முறை விளையாட்டில் அவரது திறமை குறைந்து வரும் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்த போட்டிகள் ரஷ்யன் மாநில தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்பட்டது. 

அரசியல் எதிரிகளால் அங்கு மர்மமான சூழ்நிலை நிலவிய போதிலும், அவர் விளையாடும் போது இறுக்கமாக காணப்படவில்லை. மேலும் ஹாக்கி வீரர்களுக்கு ரஷ்யர்கள் ’ஒரு அற்புதமான உதாரணம்’ என்று புடின் பெருமையாக கூறினார். இந்த ஹாக்கி போட்டியில் பெற்ற வெற்றிக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்தார்.