ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வி

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
டோங்கா சிட்டி,

5 அணிகள் பங்கேற்ற 5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் நடந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்கொரியாவும் பலப்பரீட்சையில் இறங்கின. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் பாணியை கையாண்ட தென்கொரிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது. வெற்றிக்குரிய கோலை 24-வது நிமிடத்தில் கொரியா வீராங்கனை யங்சில் லீ அடித்தார். அவர்களின் பல ஷாட்டுகளை இந்திய கோல் கீப்பர் சவிதா சூப்பராக முறியடித்தார். இல்லாவிட்டால் அந்த அணி மேலும் சில கோல்களை திணித்திருக்கும்.