ஹாக்கி
சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இந்திய அணிக்கு ஸ்ரீஜேஷ் கேப்டன்

கடைசி சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் வருகிற 23-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை நடக்கிறது.
புதுடெல்லி,

கடைசி சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள பிரிடா நகரில் வருகிற 23-ந் தேதி முதல் ஜூலை 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் 23-ந் தேதி பாகிஸ்தானையும், 24-ந் தேதி அர்ஜென்டினாவையும், 27-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், 28-ந் தேதி பெல்ஜியத்தையும், 30-ந் தேதி நெதர்லாந்தையும் எதிர்கொள்கிறது.

இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியின் கேப்டனாக கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதாக், பின்களம்: ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார், சுரேந்தர்குமார், ஜர்மன்பிரீத்சிங், பிரேந்தர் லக்ரா, அமித் ரோகிதாஸ், நடுகளம்: மன்பிரீத்சிங், சிங்லென்சனா சிங், சர்தார்சிங், விவேக் சாகர் பிரசாத், முன்களம்: சுனில், ரமன்தீப்சிங், மன்தீப்சிங், சுமித் குமார் ஜூனியர், ஆகாஷ்தீப்சிங், தில்பிரீத் சிங்.