ஹாக்கி
அகில இந்திய ஆக்கி போட்டி: இந்தியன் ரெயில்வே அணி வெற்றி

அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி வெற்றிபெற்றது.
சென்னை,

92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பஞ்சாப் சிந்து வங்கி-சென்னை ஆக்கி சங்க அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய கடற்படை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இன்னொரு ஆட்டத்தில் இந்தியன் ஆயில் அணி 7-4 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஆக்கி சங்க அணியை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கியது. ஓ.என்.ஜி.சி.-மத்திய அமைச்சகம் அணிகள் மோதிய லீக் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய கடற்படை-பஞ்சாப் சிந்து வங்கி (பிற்பகல் 2.30 மணி), ஓ.என்.ஜி.சி.-மும்பை ஆக்கி சங்கம் (மாலை 4.15 மணி), இந்தியன் ஆயில்-சென்னை ஆக்கி சங்கம் (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.