பெண்கள் உலக ஆக்கி தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

பெண்கள் உலக ஆக்கி தொடரை, இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது.

Update: 2019-06-15 23:43 GMT
ஹிரோஷிமா,

பெண்கள் உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடம் பெறும் அணியுடன் ஒரு முறை மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் உருகுவேயை தோற்கடித்தது. இந்திய அணியில் ராணி ராம்பால், குர்ஜித் கவுர், ஜோதி சுனிதா குல்லு, லாம்ரெம்சியாமி தலா ஒரு கோல் அடித்தனர். இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் போலந்து அணி 6-0 என்ற கோல் கணக்கில் பிஜியை எளிதில் வென்றது.

மேலும் செய்திகள்