‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: பிரண்ட்ஸ் அணி கோல் மழை

‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், பிரண்ட்ஸ் அணி கோல் மழை பொழிந்தது.

Update: 2019-11-10 23:37 GMT
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டங்களில் திருமால் ஆக்கி அகாடமி 5-0 என்ற கோல் கணக்கில் சேத்துப்பட்டு யங்ஸ்டர் கிளப்பையும், பிரண்ட்ஸ் கிளப் 7-1 என்ற கோல் கணக்கில் சிவலிங்கம் அணியையும் பந்தாடியது. பிரண்ட்ஸ் அணியில் சுதர்சன் 4 கோல்கள் அடித்தார்.

மேலும் செய்திகள்