சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: சென்னை துறைமுகம்-ஸ்டேட் வங்கி ஆட்டம் டிரா

சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், சென்னை துறைமுகம்-ஸ்டேட் வங்கி ஆட்டம் டிராவில் முடிந்தது.

Update: 2020-03-03 23:10 GMT
சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில், சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் சென்னை துறைமுகம்-ஸ்டேட் வங்கி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஸ்டேட் வங்கி அணியில் செட்ரிக் குருஸ் 22-வது நிமிடத்திலும், சென்னை துறைமுக அணியில் ஆர்.விக்னேஷ் 55-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி-சென்னை போலீஸ் அணிகள் சந்தித்தன. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வருமான வரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீஸ் அணியை வீழ்த்தியது. வருமான வரி அணியில் அருண்குமார் 2 கோலும், சிவமணி, மகேந்திரன் தலா ஒரு கோலும் அடித்தனர். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஐ.சி.எப்.-இந்திய உணவு கழகம் (பிற்பகல் 2 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஏ.ஜி.அலுவலகம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்