ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!

ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கம் வென்றுள்ளது.

Update: 2023-09-25 00:54 GMT

ஹாங்சோவ்,

ஆசிய விளையாட்டு போட்டிகள்: பதக்க பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்க பட்டியலில் இந்தியா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் பட்டியலில் 6ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. 

ஆசிய விளையாட்டு தொடரில் துடுப்பு படகு போட்டியில் 2 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களையும், துப்பாக்கி சூடுதல் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களையும், கிரிக்கெட் போட்டியில் 1 தங்கப்பதக்கம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.

Live Updates
2023-09-25 14:54 GMT

நீச்சல்:-

நீச்சல் 200 மீட்டர் ஆண்கள் குழு (4 பேர்) ரிலே இறுதிப்போட்டியில் இந்தியா 7ம் இடம் பிடித்தது. இப்போட்டியில் தென்கொரியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

2023-09-25 14:19 GMT

வுஷூ:-

வுஷூ ஆண்கள் 65 கிலோ பிரிவில் 1/8 இறுதி சுற்றில் இந்திய வீரர் விக்ராந்த் 1 - 2 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தோனேசிய வீரரிடம் தோல்வியடைந்தார்

2023-09-25 14:17 GMT

குத்துச்சண்டை 

குத்துச்சண்டை ஆண்கள் 63.5-71 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்றில் நேபாளம் வீரரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் நிஷாந்த் தேவ் வெற்றிபெற்றார்.

2023-09-25 13:29 GMT

வுஷூ:-

வுஷூ ஆண்கள் 60 கிலோ பிரிவில் 1/8 சுற்றில் கஜகஸ்தான் வீரரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் சூர்ய பனு பிரதாப் சிங் வெற்றிபெற்றார்

2023-09-25 12:41 GMT

நீச்சல்

நீச்சல் போட்டியில் ஆண்கள் 100 மீட்டர் பிரஸ்டோக் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் செல்வராஜ் 7ம் இடம் பிடித்தார். இப்போட்டியில் சீன வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

2023-09-25 12:19 GMT

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 60-60 கிலோ ரவுண்ட் ஆப் 32 பிரிவில் சீன வீராங்கனையிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை அருந்ததி தோல்வியடைந்தார்.

குத்துச்சண்டை ஆண்கள் 46-51 கிலோ ரவுண்ட் ஆப் 32 பிரிவில் இந்திய வீரர் தீபக் வெற்றிபெற்றார். மலேசிய வீரரை 0-5 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் தீபக் வெற்றிபெற்றார்.

2023-09-25 12:10 GMT

வுஷூ

வுஷூ போட்டியில் பெண்கள் 60 கிலோ பிரிவில் காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை தேவி அபார வெற்றிபெற்றார்

2023-09-25 11:39 GMT

நீச்சல்:

நீச்சல் போட்டி ஆண்கள் 50 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 6ம் இடம் பிடித்தார். இதன் மூலம் பதக்க வாய்ப்பை ஸ்ரீஹரி இழந்தார். இப்போட்டியில் சீன வீரர் தங்கப்பதக்கம் வென்றார்.

2023-09-25 11:08 GMT

செஸ்:

செஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4ம் சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் குமார் - ஈரான் வீரர் சையது மோதிய போட்டி சமனில் முடிந்தது. இரு வீரர்களும் தலா 0.5 புள்ளிகள் பெற்றதால் போட்டி சமனில் முடிந்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வியட்நாம் வீரரை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் விடிட் சந்தோஷ் வெற்றிபெற்றார்.

செஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4ம் சுற்றில் சீன வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை ஹம்பி 0-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்

இதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹரிகா - உஸ்பெகிஸ்தான் வீராங்கனை நிலுபர் இடையேயான போட்டி 0.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

2023-09-25 10:57 GMT

 செஸ்:-

செஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3ம் சுற்றில் வியட்நாம் வீரரை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் அர்ஜுன் குமார் வெற்றிபெற்றார்.

இதே பிரிவில் மற்றொரு போட்டியில் தாய்லாந்து வீரடை 1-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் விடிட் சந்தோஷ் வெற்றிபெற்றார்.

செஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3ம் சுற்றில் சீன வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை ஹரிகா 0-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்

இதே பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி - சீன வீராங்கனை ஜினிர் இடையேயான போட்டி 0.5-0.5 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்