ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; பதக்க பட்டியலில் முதலிடம்

ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வென்ற இந்தியா பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்து உள்ளது.;

Update:2023-07-18 19:07 IST

சாங்வொன்,

தென் கொரியாவின் சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்.எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டி ஒன்றில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய அணி தங்க பதக்கம் வென்று உள்ளது. இந்தியாவின் வீரர்களான பார்த் மனே, அபினவ் ஷா மற்றும் தனுஷ் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் தங்கம் வென்று பெருமை சேர்த்து உள்ளனர்.

இதேபோன்று, மகளிர் அணி சார்பில் ரைசா தில்லான் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் போட்டியில் இந்திய அணியின் உமாமகேஷ் மதினேனி இன்று வெண்கல பதக்கம் வென்று உள்ளார்.

நேற்று நடந்த போட்டி ஒன்றில், இந்தியாவின் அபினவ் ஷா மற்றும் கவுதமி பனோட் ஆகியோர் கொண்ட இணை ஏர் ரைபிள் கலப்பு அணிக்கான போட்டியில் அதிரடியாக விளையாடியது. போட்டியில், பிரான்ஸ் நாட்டின் ஓசன் முல்லர் மற்றும் ரொமைன் ஆப்ரீர் இணையை இந்திய இணை 17-13 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது.

இது போட்டியில் இந்தியாவுக்கான 3-வது தங்க பதக்கம் ஆகும். போட்டியின் 3-வது நாளான இன்று, ஒட்டு மொத்தத்தில் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்று உள்ளது. இதனால், சீனாவை பின்னுக்கு தள்ளி விட்டு இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதுவரை 3 தங்க பதக்கங்களை பெற்றுள்ள சீனா 2-வது இடத்துக்கு சென்று உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்