சேலத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி

சேலத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி விஜயராகவாச்சாரியார் ஹாலில் நேற்று நடைபெற்றது.;

Update:2022-09-12 02:32 IST

சேலம்:

சேலத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி விஜயராகவாச்சாரியார் ஹாலில் நேற்று நடைபெற்றது. மிஸ்டர் தமிழ்நாடு-2022 என்ற தலைப்பில் நடந்த இந்த ஆணழகன் போட்டியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆர்முடன் கலந்து கொண்டனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் சரக உதவி கமிஷனர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆணழகன் போட்டியை தொடங்கி வைத்தனர்.

இதில், 23-வயதுக்கு உட்பட்டவர்கள், 23-வயதுக்கு மேற்பட்டவர்கள், 172 மீட்டர் உயரம் கொண்டவர்கள், 40-வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட 5 பிரிவுகளாக ஆணழகன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஆர்வமுடன் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்களது திறமைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராஜேஸ், மணிகண்டன், சரவணன் ஆகியோர் செய்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்