திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த இயக்குனர் பா.விஜய்

இயக்குனரும், பாடலாசிரியருமான பா.விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-02-19 15:51 IST

திருச்செந்தூர் ,

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதன்படி, இயக்குனரும்,  நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, பெருமாள் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்கினார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவருடன் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்