திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்

தமிழ் திரைத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு.;

Update:2025-10-06 21:15 IST

தமிழ் திரைத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவர் சில படங்களில் கதா நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு இன்று திருவண்ணாமலையில் உள்ள உலக புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்தபின் சில ரசிகர்கள் யோகி பாபு உடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு, சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்