நடிகை மனோரமா வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்ட நடிகர் சங்கம் கோரிக்கை

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெண் நடிகை என்ற கின்னஸ் உலக சாதனையை மனோரமா படைத்துள்ளார்.;

Update:2025-12-20 19:39 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனோரமா. குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் 1,000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தார். கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார்.

1958-ம் ஆண்டு வெளியான 'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான மனோரமா, உலகிலேயே ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த பெண் நடிகை என்ற கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்ற அவர், ரசிகர்கள் மனதில் ‘ஆச்சி’ மனோரமாவாக நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்,

இந்த நிலையில், பழம்பெரும் நடிகை மனோரமா வாழ்ந்த சென்னை தியாகராயர் நகரை சேர்ந்த நீலகண்ட மேத்தா தெருவிற்கு “மனோரமா தெரு” என்று பெயர் சூட்டிட வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்