படப்பிடிப்பில் படுகாயமடைந்த பிரபல நடிகரின் மகன்

இப்படத்தில் அன்ஸ்வரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.;

Update:2025-12-20 20:09 IST

சென்னை

பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன். இவர் ’நிர்மலா கான்வென்ட்’ மற்றும் ’பெல்லி சந்தா’ படங்களின் மூலம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார். ’பெல்லி சந்தா’ படத்திற்குப் பிறகு, அவர் மூன்று வருட இடைவெளி எடுத்துக்கொண்டு இப்போது ’சாம்பியன்’ படத்துடன் பார்வையாளர்களிடம் வருகிறார்.

சாம்பியன் வருகிற 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்து தெலுங்கில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் விளம்பரங்களின் ஒரு பகுதியாக, ரோஷன் இன்று ஊடகங்களிடம் பேசி படம் பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்தார். அவர் பேசுகையில், “இந்தப் படத்திற்காக நூறு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகள் உள்ளன. அதற்காக நான் சிறப்புப் பயிற்சி எடுத்தேன். ஆக்‌சன் காட்சிகளில் எனக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. என் மணிக்கட்டிலும் காலிலும் காயம் ஏற்பட்டது.

காயங்கள் காரணமாக, படப்பிடிப்புக்கு மூன்று மாதங்கள் இடைவெளி விட்டேன். அந்த காயங்களிலிருந்து மீள மூன்று மாதங்கள் ஆனது. ஆக்‌சன் காட்சிகளில் காயம் ஏற்படுவது இயற்கையானது. என் தந்தையும் பல படங்களில் காயமடைந்திருக்கிறார்’ என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்