அனுபமாவின் “லாக்டவுன்” பட டிரெய்லர் வெளியானது

ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடித்த “லாக்டவுன்” படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-11-27 14:01 IST

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், பாடல்கள் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

இத்திரைப்படம் கொரொனா காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், ‘லாக் டவுன்’ படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனை அதன்பிறகு கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு என சுழலும் கதையில் அப்பெண்ணிற்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதே இந்த டிரெய்லர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்