'சக்தா எக்ஸ்பிரஸ்' - 7 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் அனுஷ்கா சர்மா?
அனுஷ்கா சர்மா கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் 'ஜீரோ' படத்தில் நடித்திருந்தார்.;
சென்னை,
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் காணப்படப்போகிறார். அவரது புதிய படமான 'சக்தே எக்ஸ்பிரஸ்'-ஐ வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளளனர். 2022-ம் ஆண்டே படப்பிடிப்பு நிறைவடைந்தநிலையில், படம் இன்னும் வெளியாகவில்லை.
புகழ்பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை புரோசிட் ராய் இயக்கியுள்ளார்.
அனுஷ்கா சர்மா கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் 'ஜீரோ' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் புதிய படங்களுக்கு கையெழுத்திடவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.