'மாமன்' படத்தின் வெற்றி - மருதமலையில் சாமி தரிசனம் செய்த சூரி

சூரி நடித்த 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.;

Update:2025-05-23 06:36 IST

சென்னை,

மருதமலை முருகன் கோவிலில் நடிகர் சூரி சாமி தரினம் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த சூரி தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் சூரி கதாநாயகனாக நடித்த 'மாமன்' திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'மாமன்' படத்தின் வெற்றியையடுத்து, முருகப்பெருமானின் ஏழாவது படைவீடாகக் கருதப்படும் மருதமலையில் நடிகர் சூரி சாமி தரினம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்