அறைந்து கொலை மிரட்டல் விடுத்தார் - 'மார்கோ' நடிகர் மீது வழக்குப்பதிவு

நடிகர் உன்னி முகுந்தனின் மேலாளர் விபின், காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.;

Update:2025-05-27 10:54 IST

கொச்சி,

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தனது மேலாளரை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக நடிகர் உன்னி முகுந்தன் தன்னை தாக்கியதாக, அவரது மேலாளர் விபின் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

தன்னை அறைந்து , ஆபாச வார்த்தைகளில் திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விபின் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, கக்கநாடு இன்போபார்க் போலீசார் 'மார்கோ' பட நடிகர் உன்னி முகுந்தன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்