'குஷி' படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது
எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி திரைப்படம் வருகிற 25ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி வெளியான படம் குஷி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தினை எஸ்.ஜே.சூர்யா இயக்கியிருந்தார்.
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக சொல்லப்போனால் விஜய் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக இப்படம் அமைந்தது எனலாம். இந்த படம் உலகளவில் ரூ. 22 கோடிக்கு மேல் அப்போதே வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்திருக்கிறது.
இந்த நிலையில், இப்படம் தரம் உயர்த்தப்பட்ட 4 தரத்தில் டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதாவது, வருகிற 25ந் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குஷி பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா குஷி படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்.