'ரெட் பிளவர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
விக்னேஷ் நடித்துள்ள ரெட் பிளவர் படம் ஆக்ஸ்ட் 8-ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ரெட் பிளவர்'. சயின் பிக்சன் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம் இந்த படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில், ரெட் பிளவர் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது.