கரூர் கூட்ட நெரிசல்.... விஜய் சேதுபதி பட தலைப்பு மற்றும் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு

இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் இன்று மாலை 4.02 மணிக்கு வெளியாக இருந்தது.;

Update:2025-09-28 10:06 IST

சென்னை,

பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் ஒரு பான்-இந்திய படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்க இருந்தது. இதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தநிலையில், தலைப்பு மற்றும் டீசர் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்தின் காரணமாக, இன்று திட்டமிடப்பட்டிருந்த தலைப்பு மற்றும் டீசர் வெளியீட்டு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் தபு, சம்யுக்தா மற்றும் துனியா விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் ஆகியவர்றின் கீழ் சார்மி கவுர், பூரி ஜெகன்னாத் மற்றும் ஜேபி நாராயண் ராவ் கொண்ட்ரோலா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். மஹதி ஸ்வரா சாகர் இசையமைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்