இசையமைப்பாளர் அனிருத்துக்கு திருமணம் எப்போது?.. தந்தை ரவிசந்தர் தகவல்

இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவிசந்தரிடம் அனிருத்துக்கு திருமணம் எப்போது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.;

Update:2025-08-16 09:23 IST

சென்னை,

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் உருவான பாடல்களையும் பாடியுள்ளார். இப்போது அவர் மதராஸி, ஜனநாயகன், ஜெயிலர் 2 என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவரது இசையில் நேற்று கூலி திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில், இப்படத்தை திரையரங்கில் காண, அனிருத்தின் தந்தை வந்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு செல்லும்போது அவரிடம் செய்தியாளர்கள் அனிருத்தின் திருமணம் எப்போது என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு "எனக்கே தெரியவில்லை. நான் உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். உங்களுக்கு தெரிந்தால் கட்டாயம் என்னிடம் வந்து சொல்லுங்கள்", என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்