ஓடிடியில் வெளியாகும் பாவனாவின் 'தி டோர்'

'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா, தற்போது ’தி டோர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.;

Update:2025-05-14 09:44 IST

சென்னை,

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பாவனா. கடந்த 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தற்போது 'தி டோர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஜெய் தேவ் இயக்கி இருக்கும் இப்படத்தை ஜூன் டிரீம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் ராஜன் தயாரித்துள்ளார். மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 16-ம் தேதி முதல் இப்படம் சிம்ப்ளி சவுத் தளத்தில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்