"விடுதலை -2" படத்தின் டைரக்டர் கட் ஓ.டி.டி தளத்தில் வெளியீடு

விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘விடுதலை -2’ படத்தின் டைரக்டர் கட் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.;

Update:2025-06-06 19:03 IST

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை 2'. இந்த படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் சேத்தன், கென் கருணாஸ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க இளையராஜா இசையமைத்திருந்தார்.

விடுதலை இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்றது. இதையடுத்து படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் விடுதலை இரண்டாம் பாகம் படம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள் வெளியான நிலையில், மேலும் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணி நேரம் 7 நிமிடங்கள் கொண்ட படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்