போர் பதற்றம்...திரையரங்கை தவிர்த்து ஓடிடியில் வெளியாகும் திரைப்படம்

வாமிகா கபி நடித்துள்ள 'பூல் சுக் மாப்' படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது.;

Update:2025-05-09 17:47 IST

மும்பை,

பஞ்சாபி மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் வாமிகா கபி. இவர் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'ஜப் வி மெட்' என்ற இந்தித் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் கீர்த்தி சுரேஷ், வருண் தவான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த 'பேபி ஜான்' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் 'பூல் சுக் மாப்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை மடாக் பிலிம்ஸ் தயாரிக்க கரண் ஷர்மா எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படம் வருகிற 16-ம் தேதி வெளியாக இருந்தநிலையில், நாடு முழுவதும் போர் பதற்றம் காரணமாக திரையரங்குகளில் நாளை வெளியாகாது என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், வருகிற 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்