பிரம்மோற்சவ விழா: குதிரை வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வரர் பவனி

குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.;

Update:2025-02-26 11:10 IST

திருப்பதி:

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை குதிரை வாகன சேவை நடைபெற்றது. கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கல்யாண வெங்கடேஸ்வரர், நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேர் மற்றும் வாகன சேவைக்கு முன்னால் நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடந்தன. பஜனை கோஷ்டிகள் அன்னமாச்சாரியாரின் பக்தி சங்கீர்த்தனங்களை பாடினர்.

நிகழ்ச்சிகளில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி மற்றும் கோவில் பிற துறை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்