அதிவேகமாக வந்த கார் மோதி 14 வயது சிறுவன் பலி; சந்தைக்கு சென்றபோது சோகம்

சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.;

Update:2025-05-27 19:55 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 39 பகுதியில் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு அப்பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ரவி கிஷன் நேற்று பொருட்கள் வாங்க சென்றுள்ளான்

சந்தைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வேகமாக வந்த கார் சிறுவன் ரவி மீது மோதியது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ரவி கிஷன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவர் கைது செய்யப்பட்டாரா? என்ற விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்