எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 3 யானைகள் பலி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-07-18 18:18 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் நேற்று இரவு ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. கரக்பூர், டாடா நகர் இடையே ரெயில் சென்றுகொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து திடீரென 30க்கும் மேற்பட்ட யானைகள் தண்டவாளத்தை கடக்க முற்பட்டன.

அப்போது, எதிர்பாராத விதமாக 3 யானைகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இந்த சம்பவத்தில் தாய் யானை, 2 குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்