உத்தர பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விபத்து; 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.;

Update:2025-06-15 20:57 IST

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள மசானி பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று இன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி காஜல் மற்றும் யசோதா ஆகிய 2 குழந்தைகள் மற்றும் டோட்டாராம் என்ற இளைஞர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்