திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 பேர் பலி

இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.;

Update:2025-05-31 10:58 IST

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கார்தொய் மாவட்டம் குசுமா என்ற கிராமத்தில் நீரஜ் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உறவினர்கள் 11 பேர் காரில் புறப்பட்டனர்.

கார் பதியம் என்ற கிராமத்தில் வந்தபோது வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்