ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - விமானப்படை தளபதி

ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.;

Update:2025-08-09 14:17 IST

பெங்களூரு,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 6 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.

இந்த நிலையில், இந்திய விமானப்படையின் தாக்குதலில் எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை முதன்முறையாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி அமர்ப்ரீத் சிங் கூறியதாவது:

"பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான 6 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இவற்றில் 5 போர் விமானங்கள், மற்றொரு விமானம் மிகப் பெரிய அளவிலான ராணுவ விமானமாகும். ஜகோபாபத் விமானத் தளத்தில் ஹேங்கரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எப்-16 ரக போர் விமானங்களும் விமானப்படைத் தாக்குதலில் சுக்கு நூறாக நொறுங்கின. இந்தத் தாக்குதல் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்