சாலை தடுப்பில் கார் மோதி 7 பேர் பலி

இறந்த உறவினரின் அஸ்தியை ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் கரைத்துவிட்டு உறவினருடன் காரில் வீடு திரும்பினர்.;

Update:2025-09-15 02:27 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கனேரி வாடிகா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராம்ராஜ் மற்றும் வைஷ்ணவி தம்பதி. இவர்கள் இறந்த தங்களது குடும்ப உறுப்பினரின் அஸ்தியை ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் கரைத்துவிட்டு உறவினருடன் காரில் வீடு திரும்பினர்.

அப்போது அவர்கள் பிரஹ்லாத்புராவில் உள்ள ஷிவ்தாஸ்புரா போலீஸ் நிலையத்திற்கு அருகே வந்தபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டதில் காரில் இருந்த 7 பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்