உடல்நலம் குன்றிய கணவர்; இரவில் மனைவி அறைக்குள் ஒருவரை அடுத்து ஒருவர் என புகுந்து... கணவரின் சகோதரர்கள் வெறிச்செயல்
உன்னிடம் இப்படி நடந்து கொண்டால், உன்னுடைய கணவரின் உடல்நலம் தேறி விடும் என சிலர் கூறினர் என்றும் 2 பேரும் கூறியுள்ளனர்.;
ரத்லம்,
மத்திய பிரதேசத்தில் தப்ரா பகுதியை சேர்ந்தவர் ஹினா கான் (வயது 25). 2023-ம் ஆண்டு மே 5-ந்தேதி இளைஞர் ஒருவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய இல்லற வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
கணவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால், சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினார். மருத்துவரிடம் சென்று காட்டியும் பலனில்லை. இந்நிலையில், ஹினா கான் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில், உடல்நல பாதிப்பு ஏற்பட்டதும் சிலர், குவாலியர் நகரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் உள்ள ரத்லம் மாவட்டத்தின் ஜாவ்ரா பகுதியில் உள்ள உசைன் தெக்ரி ஷெரீப்புக்கு செல்லும்படி கணவரிடம் கூறியுள்ளனர். நிறைய பேருக்கு உடல்நலம் தேறியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.
இதனால், அவர் மனைவியை வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த மனைவியை பார்த்த கணவரின் 2 சகோதரர்களின் மனநிலை மாறியுள்ளது. அவர்களின் மற்றொரு முகம் வெளிப்பட்டு உள்ளது.
இதுபற்றிய எப்.ஐ.ஆர். பதிவில், ஹினா கான் இரவில் தனியாக இருந்த நிலையில், அதனை கணவரின் 2-வது அண்ணன் நோட்டமிட்டு அவருடைய அறைக்குள் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அதன்பின்னர் அவர் வெளியே சென்றதும், கணவரின் மூத்த அண்ணன் உள்ளே புகுந்து ஹினா கானை பலாத்காரம் செய்துள்ளார். கோடை காலத்தில் குளிராக இருக்க வேண்டும் என்பதற்காக, கதவு பகுதியில் அந்த பெண் கூலரை வைத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனால், கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது. இதனை பயன்படுத்தி 2 பேரும் அறைக்குள் புகுந்து கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்களை எதிர்க்கும்போது, பக்கத்தில் படுத்திருந்த 10 மாத பெண் குழந்தையை கொன்று விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர்.
இதுதவிர, உன்னிடம் இப்படி நடந்து கொண்டால், உன்னுடைய கணவரின் உடல்நலம் தேறி விடும் என சிலர் கூறினர் என்றும் கூறி இருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ, வேறு நபர்களிடம் கூறினாலோ, அனைத்தும் தவறாக போய் விடும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதன்பின்னர், பலமுறை அந்த பெண்ணை இரண்டு பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வந்த கணவரிடம் நடந்த விசயங்களை கூறி ஹினா கான் அழுதுள்ளார். இதனை கேட்ட கணவர், ஹினா கானை நம்ப மறுத்திருக்கிறார். இதனை பொய் என கூறி இருக்கிறார். இதன்பின்பு, இருவரும் பூர்வீக வீட்டை விட்டு வெளியேறி சந்தை பகுதியில் உள்ள வீட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.
ஆனால், அப்போதும் விடாமல் கணவர் வீட்டில் இல்லாதபோது, அவருடைய அண்ணன் சென்று ஹினா கானை பலாத்காரம் செய்துள்ளார். இதனால், விரக்தியடைந்த ஹினா கான் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் அவரை அழைத்தபோது, அவருடன் செல்ல மறுத்து விட்டார். ஏன்? என்று பெற்றோர் கேட்டபோது, அவருக்கு நேர்ந்த துயர சம்பவங்களை கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அந்த பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்து நடத்தியுள்ளனர். ஆனால், கணவரின் வீட்டார் ஒருவரும் வரவில்லை. இதனால், குவாலியரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஹினா கானும், அவருடைய பெற்றோரும் சென்று புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.