தொழில்நுட்பகோளாறு: டெல்லிக்கு திருப்பிவிடப்பட்ட விமானம்

தொழில்நுட்ப சிக்கல் என்ற சந்தேகத்தால் விமானம் மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது.;

Update:2025-06-16 23:03 IST

புதுடெல்லி,

டெல்லியில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு மாலை 6:20 மணிக்கு பிர்சா முண்டா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் டெல்லிக்குத் திருப்பி விடப்பட்டது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் என்ற சந்தேகத்தால் மீண்டும் திரும்பியதாக கூறப்படுகிறது.

உரிய ஆய்வுக்கு பின் விமானம் மீண்டும் ராஞ்சிக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்