ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே ராகுல் யாத்திரை - அமித்ஷா தாக்கு

காங்கிரஸ் அரசாங்கம் அமைந்துவிட்டால் பீகாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார்.;

Update:2025-09-18 17:26 IST

பாட்னா,

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வாக்கு திருட்டு எனும் கதையை ராகுல் காந்தி பரப்புவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். பீகாரின் ரோட்டாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொரு முறையும் தவறான கதையை பரப்புகிறார்கள். ராகுல் காந்தி பீகாரில் ஒரு யாத்திரை மேற்கொண்டார்.

அந்த யாத்திரையின் நோக்கம் வங்கதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றுவதாகும். உங்களில் யாராவது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்களா? இல்லை. இது முழுக்க முழுக்க ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் யாத்திரை.ஊடுருவல்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டுமா? நமது இளைஞர்களுக்காக அல்லாமல், வாக்கு வங்கி ஊடுருவல்காரர்களுக்காக வேலை வாய்ப்பை வழங்குகிறார்

ராகுல் காந்தி. தப்பித் தவறி அவர்களின் அரசாங்கம் அமைந்துவிட்டால் பிஹாரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊடுருவல்காரர்கள் மட்டுமே இருப்பார்கள். எனவே, இது குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்