மகனை கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்; பரபரப்பு சம்பவம்

மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2025-02-15 17:37 IST

அமராவதி,

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கம்பம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி தேவி (வயது 57). இவரது மகன் ஷியாம் பிரசாத் (வயது 35). துப்புரவு பணியாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இதனிடையே, ஷியாம் பிரசாத் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் ஐதராபாத், நரசரபேட்டை, பெங்களூரு பகுதியில் உள்ள தனது சித்தி, பெரியம்மா, அத்தை உள்பட உறவினர்களிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், மகனின் ஒழுங்கீன செயல்களால் ஆத்திரமடைந்த லெட்சுமி தேவி தனது உறவினர்களுடன் சேர்ந்து பிரசாத்தை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, நேற்று முன் தினம் இரவு லெட்சுமி தேவி கோடாரியால் வெட்டி பிராசாத்தை கொலை செய்துள்ளார். பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து பிரசாத்தின் உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள ஏரியில் வீசியுள்ளனர்.

இதையடுத்து, லெட்சுமி தேவி தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ஏரியில் வீசப்பட பிரசாத்தின் உடல் பாகங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள லெட்சுமி தேவியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்