10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சிறுவன் வைபவ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் பாலக்காடு மவட்டம் விலயனூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ் குமார். இவரது மகன் வைபவ்(வயது 16) . சிறுவன் வைபவ் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
இதனிடையே, வைபவ் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து பெற்றோர் விசாரித்தபோதும் மாணவன் சரிவர பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த வைபவ் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். மாலை வீட்டிற்கு வந்த தாயார், மகன் தூக்கில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்குமுன் இதே தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவனும் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்களுக்கு மன ரீதியில் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியை, வகுப்பு ஆசிரியை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.