ஆய்வுக்கூட்டத்தில் ராகுல்காந்தி - உ.பி. மந்திரி கடும் வாக்குவாதம்
ராகுல் காந்தியுடன் மந்திரி வாக்கு வாதம் செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.;
ரேபரேலி,
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி கலெக்டர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், முதல்-மந்திரி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசில் தோட்டக்கலைத்துறை மந்திரியாக பதவி வகிக்கும் தினேஷ் பிரதாப் சிங் பங்கேற்றிருந்தார்.
இந்த கூட்டத்தில் அருகருகே அமர்ந்திருந்த ராகுல்காந்தி, மந்திரி தினேஷ் பிரதாப் சிங் இருவருக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டனர். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.