பீகார் சட்டசபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

பீகாரில் 7.43 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.;

Update:2025-10-10 21:18 IST

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6-ம்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் நவம்பர் 11-ம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நவம்பர் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 17-ம் தேதி வரையும், 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 13-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து சுயேச்சையாக போட்டியிடும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருசிலர் மட்டுமே இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். ஆளும் தேசிய ஜனநாய்க கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் இன்னும் தொகுதி உடன்பாடு முடிவடையாததால் அவர்கள் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

பீகாரில் 7.43 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 14 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்களாக உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்