பொம்மைகள் போல் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்கள்.. நடுங்கவிடும் சிசிடிவி காட்சி
சீட் பெல்ட் அணியாத கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தொட்டபல்லாபுராவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்தவர்கள் சாலையில் தூக்கி விசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பெங்களூரு நோக்கி சென்ற கார் கட்டிஹோசஹள்ளி பகுதியை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் சீட் பெல்ட் அணியாத கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.