தர்மஸ்தலா விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தவறு செய்து சிக்கிக் கொண்டது: பாஜக
தேசத்துரோகிகளுடன் கைகோர்த்து காங்கிரஸ் அரசு செயல்படுகிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.;
பெங்களூரு,
பா.ஜனதா மூத்த தலைவரும், கர்நாடக மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தர்மஸ்தலா விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணை நடக்கிறது. குழிகளை தோண்டி சடலங்களை தேடுகிறார்கள். இதுவரை எலும்புக்கூடுகளும் கிடைக்கவில்லை. அதனால் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தர்மஸ்தலா ஆன்மிக தலத்திற்கு எதிராக சதி நடந்துள்ளதாக பேசுகிறார். இந்த விஷயத்தில் அரசு தவறு செய்து சிக்கி கொண்டுள்ளது.
அதற்காக முன்ஜாமீன் பெறுவது போல் சதி நடந்துள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறுகிறார். காங்கிரஸ் கட்சி முழுவதுமாக காங்கிரஸ் கட்சியாக இருக்கவில்லை. இது கம்யூஸ்டு காங்கிரஸ் கட்சியாக செயல்பட தொடங்கியுள்ளது. கம்யூனிஸ்டு சிந்தனைகளை இந்த அரசு அமல்படுத்துகிறது. பிரதமர் மோடியே தர்ஸ்தலாவின் பணிகளை பாராட்டியுள்ளார். தேசத்துரோகிகளுடன் கைகோர்த்து காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.