உறவில் வெடித்த மோதல்: பெண் போலீஸ் அதிகாரி கழுத்தை நெரித்து கொலை
பெண் போலீசாருக்கும் பாதுகாப்பு படை வீரருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.;
அகமதாபாத்,
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் அஞ்சார் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் அருணா பென் (வயது 25) இவரது பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் திலீப் டாங்க்சியா. இவர் மணிப்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் படையில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு இன்ச்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக அருணாபென்னும், திலீப்பும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.
நேற்று முன் தினம் இரவின்போது அருணாபென்னும், திலீப்பும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களிக்கிடையே திடீரென்று மோதல் வெடித்தது. அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் அதிகரித்தது. இதில் ஆத்திரம் அடைந்த திலீப், அருணாபென்னின் கழுத்தை பிடித்து நெரித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருணாவை கொலை செய்தபிறகு திலீப், அருணா வேலை பார்க்கும் போலீஸ் நிலையத்திலேயே சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.