டெல்லி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் அவதி

விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்;

Update:2025-07-20 21:47 IST

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தலைநகர் டெல்லிக்கு இன்று மாலை 6 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படவிருந்தது.

விமானத்தில் 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறிய நிலையில் இறுதிகட்ட ஆய்வுகளை விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டனர்.

அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர். மேலும், இது தொடர்பாக விமான ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராஞ்சி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்