தென்மாநிலங்களில் வரதட்சணை கொலை எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?

வரதட்சணை தொடர்பாக 15 ஆயிரம் புகார்களும், 6,100 மரணங்களும் (தற்கொலை உள்ளிட்ட) பதிவாகி உள்ளன.;

Update:2025-10-04 06:16 IST

ஐதராபாத்,

தேசிய குற்ற ஆவண வாரியத்தின் 2023-ம் ஆண்டுக்கான தரவுகளின்படி, அனைத்து தென்னிந்திய மாநிலங்களில் வரதட்சணைக்காக அதிக படுகொலைகள் நடந்த மாநிலங்களில் தெலுங்கானா முதல் இடம் பிடித்து உள்ளது. இதன்படி, வரதட்சணை தொடர்பாக 36 படுகொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.

ஒடிசா (224) மற்றும் மேற்கு வங்காளம் (220) ஆகிய மாநிலங்களை விட மிக குறைவு என்றபோதிலும், ஆந்திர பிரதேசம் (26), கர்நாடகா (12), மராட்டியம் (5) மற்றும் தமிழகம் (1) ஆகிய பிற தென்னிந்திய மாநிலங்களை விட அதிகம் ஆகும். இவற்றில் ஐதராபாத் நகரம் முதல் இடத்தில் உள்ளது.

2023-ம் ஆண்டில், நாடு முழுவதும் வரதட்சணை தொடர்பான வழக்குகள் 14 சதவீதம் அதிகரித்து உள்ளன. வரதட்சணை தொடர்பாக 15 ஆயிரம் புகார்களும், 6,100 மரணங்களும் (தற்கொலை உள்ளிட்ட) பதிவாகி உள்ளன.

2022-ம் ஆண்டை காட்டிலும் (44 படுகொலைகள்) இந்த எண்ணிக்கை சற்று குறைவு என்றபோதும், அனைத்து பிற தென்னிந்திய மாநிலங்களின் எண்ணிக்கையை விட தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது. தெலுங்கானாவில் 145 வரதட்சணை தொடர்பான மரணங்கள் நடந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்