மும்பையில் பங்கு முதலீட்டு மோசடி ரூ.8 கோடியை இழந்த மூதாட்டி

பங்கு முதலீடுகள் செய்தால் அதிக வருமானம் வரும் என்று மூதாட்டியிடம் ஆசைகாட்டி மோசடி செய்துள்ளனர்.;

Update:2025-07-23 08:52 IST

representation image (Ai grok)

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை பாந்த்ராவை சேர்ந்த 62 வயதான மூதாட்டிக்கு புகழ்பெற்ற நிதி நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் உதவியாளர் என ஒரு இளம்பெண், பங்கு முதலீடுகள் செய்தால் அதிக வருமானம் வரும் என்று மூதாட்டியிடம் ஆசைகாட்டி உள்ளார்.

அந்த மூதாட்டியும் அதனை நம்பி அந்த இளம் பெண்ணின் வற்புறுத்தலின் பேரில், பங்கு முதலீடுகளுக்காக ரூ.8 கோடியை பல வங்கி கணக்குகளுக்கு மாற்றி உள்ளார். சில நாட்கள் கழித்து மூதாட்டி தனது பணத்தை எடுக்க முயன்றபோது, மீண்டும் 10 சதவீத தொகையை டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.

இதனால் சந்தேகமடைந்த மூதாட்டி தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து இது குறித்து சைபர் இணையதளம் மூலம் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்