காஷ்மீரில் என்கவுன்ட்டர்; பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய ராணுவம்

காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரின்போது, வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.;

Update:2025-09-08 10:38 IST

குல்காம்,

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குல்காம் மாவட்டத்தின் குடார் வன பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் சி.ஆர்.பி.எப். கூட்டாக சேர்ந்து, சிறப்பு அதிரடி குழுவாக பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினர்.

இந்த என்கவுன்ட்டரின்போது, வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்